×

ஈரோடு அரசு மருத்துவமனையில் 43 பேருக்கு கொரோனா சிகிச்சை

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது 43 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் மெல்ல பரவத் தொடங்கிய நோய் தொற்று, பொதுப்போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக வேகமாக பரவி வருகிறது. பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு
 

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது 43 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் மெல்ல பரவத் தொடங்கிய நோய் தொற்று, பொதுப்போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக வேகமாக பரவி வருகிறது. பெருந்துறை அரசு

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு அரசு மருத்துமனையில் தற்போது 43 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறியுடன் 77 பேரும், மிதமான அறிகுறியுடன் 12 பேரும் தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், தொற்று உறுதியாகும் பட்சத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.