×

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவை, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க அப்பகுதி வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 6 நாட்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து
 

ஈரோடு

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவை, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க அப்பகுதி வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 6 நாட்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு இன்று காலை 8 மணி முதல் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.. இதேபோன்று, மைசூரில் இருந்தும் சத்தியமங்கலத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதில் முகக்கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் தாளவாடியில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதிக்கும் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.