×

பவானிசாகர் அணை 2-வது முறையாக 100 அடியை எட்டியது

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை யாகும் .105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது . கடந்த மாதம் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணை வேகமாக நிரம்பியது. 102 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் பவானிசாகர் அணை 102அடியை எட்டியது.
 

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை யாகும் .105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது .

கடந்த மாதம் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணை வேகமாக நிரம்பியது. 102 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் பவானிசாகர் அணை 102அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது . இதனால் பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 100. 07 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 5,537 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 550 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 2, 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு மிதமான அளவில் நீர்வரத்து வருவதால் இன்னும் ஓரிரு நாளில் 102 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.