×

ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றையானை… போக்குவரத்து பாதிப்பு…

ஈரோடு ஆசனூர் வனப்பகுதியில் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை, யானைகள், மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி சாலையை கடந்துசெல்வது வாடிக்கை. இந்த நிலையில், திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு பகுதியில் ஒற்றை காட்டுயானை உணவு தேடி சாலையை வழிமறித்து நின்றது. இதனை
 

ஈரோடு

ஆசனூர் வனப்பகுதியில் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை, யானைகள், மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி சாலையை கடந்துசெல்வது வாடிக்கை.

இந்த நிலையில், திண்டுக்கலில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அடுத்த செம்மண் திட்டு பகுதியில் ஒற்றை காட்டுயானை உணவு தேடி சாலையை வழிமறித்து நின்றது. இதனை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு, யானை கடந்து செல்வதற்காக காத்திருந்தனர்.

சாலையின் நடுவே சுமார் அரை மணிநேரம் உலாவிய அந்த யானை பின்னர் வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர்