×

ஈரோடு: மனுநீதி திட்ட முகாம் – 67 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சி

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாண்டாம்பாளையம்,கதிரம்பட்டி, கூரபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இன்று மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில், மொத்தம் 235 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு 3.60லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை
 

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சாண்டாம்பாளையம்,
கதிரம்பட்டி, கூரபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இன்று மனுநீதி திட்ட முகாம் நடைபெற்றது. ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில், மொத்தம் 235 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


மேலும், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு 3.60லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 11 பயனாளிகளுக்கு புதியமின்னணு குடும்ப அட்டைகளையும்வழங்கினார். மேலும், முதியோர் உதவித்தொகை பெறும் 26 முதியவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, வட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.