×

ஈரோடு: தீபாவளி உணவு பொருட்கள் தயாரிக்க, விற்க அனுமதி கட்டாயம்

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இன்றி உணவு பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு உணவகங்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள், இனிப்பு மற்றும் கார திண்பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து உணவு பொருட்கள்தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உரிமம் இல்லாதவர்கள் உடனடியாக
 

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இன்றி உணவு பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு உணவகங்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள், இனிப்பு மற்றும் கார திண்பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து உணவு பொருட்கள்
தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், உரிமம் இல்லாதவர்கள் உடனடியாக www.foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்து உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், உணவு தயாரிப்பு குறித்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ள ஆட்சியர் கதிரவன், உணவு பொருட்களைபொட்டலமிட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிமம் பெற்ற வணிக நிறுவனங்களில் விபரச்சீட்டுடன் கூடிய இனிப்பு, காரம் மற்றும் இதர உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களை அறிவுறுத்திய ஆட்சியர், உணவு பொருள் தரம் குறித்த
புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.