×

ஈரோடு: மாநகராட்சி பகுதிகளில் இரவில் கிருமிநாசினி தெளிப்பு

ஈரோட்டில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் மாநகர பகுதியில் இரவு நேரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தீபாவளிபண்டிகையை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பகல் நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பதற்கு பதிலாக இரவு நேரங்களில் தெளித்தால் நன்றாக இருக்கும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, நேற்று இரவு நேரங்களில் மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் முக்கியமான சாலைகள் மற்றும் கடை
 

ஈரோட்டில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் மாநகர பகுதியில் இரவு நேரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


அப்போது, பகல் நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பதற்கு பதிலாக இரவு நேரங்களில் தெளித்தால் நன்றாக இருக்கும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, நேற்று இரவு நேரங்களில் மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் முக்கியமான சாலைகள் மற்றும் கடை வீதிகளில் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், கிருமி நாசினி தெளிப்பதில் சிக்கல்
ஏற்படுவதாகவும், அதனால், இனி தீபாவளி முடியும் வரை இரவுநேரங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், இரவு 10
மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்ட பின், இப்பணிகள் 3 ஷிப்ட்களாக நடக்கும் என்றும் அவர் கூறினார்