×

ஈரோடு: கோபி அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக்ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிஷனிங் படிப்புகளும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெல்டர் ஆகிய 4 தொழிற் பிரிவுகளில் நேரடியாகசேர்ந்து பயில வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா
 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக்
ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிஷனிங் படிப்புகளும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெல்டர் ஆகிய 4 தொழிற் பிரிவுகளில் நேரடியாக
சேர்ந்து பயில வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சியுடன், தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி மற்றும் தையற்கூலியுடன் 2 செட்
சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


குறிப்பிட்ட தொழிற் பிரிவுகளில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு, பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்குவதுடன், பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, நேரிலோ அல்லது 04285 –
233234, 94990 55706 மற்றும் 94990 55705 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.