×

ஈரோடு: மனுநீதி திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

ஈரோட்டில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மனுநீதி திட்ட முகாமில், பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் மனுநீதி திட்ட முகாம்நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து, சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு
 

ஈரோட்டில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மனுநீதி திட்ட முகாமில், பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் மனுநீதி திட்ட முகாம்
நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு முதியோர்
உதவித்தொகை மற்றும் 9 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என ரூ.2.28 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை பெறுவதற்கான
ஆணைகளும், முதியோர் உதவித்தொகை பெறும் 31 பேருக்கு வேட்டி, சேலைகளையும் ஆட்சியர் கதிரவன் வழங்கினார். இந்த முகாமில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், கோட்டாட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.