×

ஸ்கிரீனிங் மையங்கள் மூலம் நோய்த்தொற்று விரைவில் கண்டறியப்பட்டு சிகிச்சை! சுகாதார இணை இயக்குனர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டு நோய் தொற்று உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கிரீனிங் மையம், ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் இந்த இரண்டு இடங்களில் ஸ்கிரீன் மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்த மதிப்பு 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு இடங்களில்
 

ஈரோடு மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டு நோய் தொற்று உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கிரீனிங் மையம், ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் இந்த இரண்டு இடங்களில் ஸ்கிரீன் மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்த மதிப்பு 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு இடங்களில் ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வருபவர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் நோய் தன்மை கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பாதிப்பு தன்மை கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டால் அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம். அவர்கள் வீட்டிற்கு சுகாதார பணியாளர்கள் சென்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் அதாவது நோய்வாய்ப் பட்டவர்களுக்கு தனி அறை தனி கழிப்பறை வசதிகள் இருக்குமானால் அவர்கள் வீட்டிலேயே தனிப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த ஸ்கிரீனிங் மையங்கள் ஈரோட்டில் உள்ள பவானி கோபி அந்தியூர் சத்யமங்கலம் கொடுமுடிஉள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஸ்கிரீன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் துறை இணை இயக்குனர் சவுண்ட் அம்மாள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பிசிஆர் பரிசோதனை அதிகரிக்க படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டு தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அந்த வைரஸின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொற்று ஏற்பட்டவர்கள் அதிகளவு குணமடைந்து வருகின்றனர்.

ஈரோடு பொருத்தவரை மாநகர் பகுதியில்தான் தொற்று உள்ளவர்கள் அதிக அளவில் இருப்பதால் ஈரோடு அரசு மருத்துவமனை தவிர ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஸ்கிரீனிங் மையம்அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். முதியவர்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். முக கவசம் நமது உயிர் கவசம் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாகவும் கடைபிடிக்க வேண்டும். அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி ஒன்றும் செய்ய முடியாது என்றார்.