×

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கையை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் வாகன ஏலம் தனியாக நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்க ஏற்ப்பாடு
 

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா தலைமையில் நடந்த இந்த ஏலத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கையை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் வாகன ஏலம் தனியாக நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களும் கலந்துகொண்டு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் கிடைக்க ஏற்ப்பாடு செய்த மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் செல்வநாயகம், பகத்சிங் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.