×

வீடுபுகுந்து 35 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில், மூவர் கைது

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டை அருகேயுள்ள ஜே.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 35 சரவன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா நிலக்கோட்டை உதவி
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டை அருகேயுள்ள ஜே.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 35 சரவன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா நிலக்கோட்டை உதவி ஆய்வாளர் காந்தி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளிகள் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து நெல்லைக்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ரமேஷ்(31), திருச்செல்வம்(40) மற்றும் பாலசங்கர் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 35 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மூவரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.