×

அழுகிய நிலையில் பெண் காவலர் சடலம்… மீண்டும் உயிர்த்தெழுவார் என 22 நாட்களாக பிரார்த்தனை செய்த உறவினர்கள்…

திண்டுக்கல் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பெண் காவலரின் சடலத்தை மீண்டும் உயிர்த்தெழுவார் என 22 நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நந்தவனப்பட்டி ட்ரஸ்சரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணி புரிந்து வ்ந்தார். இவருக்கு பால்ராஜ் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இந்திரா, தனது சகோதரி வாசுகி மற்றும் குடும்ப நண்பர் சுதர்கனம்
 

திண்டுக்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த பெண் காவலரின் சடலத்தை மீண்டும் உயிர்த்தெழுவார் என 22 நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நந்தவனப்பட்டி ட்ரஸ்சரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணி புரிந்து வ்ந்தார்.

இவருக்கு பால்ராஜ் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இந்திரா, தனது சகோதரி வாசுகி மற்றும் குடும்ப நண்பர் சுதர்கனம் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 16ஆம் முதல் அன்னை இந்திரா மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். டிசம்பர் 25ஆம் தேதி பணிக்கு திரும்ப வேண்டிய, அவரிடம் இருந்து எந்த தகவலும் வர வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருடன் பணியாற்றும் 2 பெண் காவலர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததுடன், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் காவலர்கள் உடனடியாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. இதனை தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வாசுகி மற்றும் சுதர்சனம் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது, அன்னை இந்திரா கடந்த டிசம்பர் 7ஆம் தேதியே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தினமும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிச்சி அடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.