×

பட்டா வழங்க மறுக்கும் அதிகாரிகள்… திண்டுக்கல் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்…

திண்டுக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுத்து வரும் ஆத்தூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வள்ளலார் நகர் பகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவையும் முறையாக செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 1996ஆம் அந்த இடம் இந்துசமய அறநிலையத்
 

திண்டுக்கல்

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுத்து வரும் ஆத்தூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வள்ளலார் நகர் பகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவையும் முறையாக செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 1996ஆம் அந்த இடம் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என புகார் எழுந்ததால், சம்பந்தப்பட்ட இடத்தை விற்கவும், வாங்கவும் தடை வித்த்து சின்னாளபட்டி சார் பதிவாளர் மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக அந்த பகுதி மக்கள் தொடர்ந்த வழக்கில், நிலம் குடியிருப்பவர்களுக்கே சொந்தம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்காமால் அந்த இடத்திற்கு வங்கிக்கடன் பெற மாற்றி எழுதித் தர அதிகாரிகள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2ஆம் தேதி ஆத்தூர் வட்டாட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த வள்ளலார் நகரை சேர்ந்த பொதுமக்களை அவர் அவமரியாதையாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்களை அவமதிப்பு செய்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வள்ளலார் நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவை ஏற்று தங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் அவர்கள் வலியுறுத்தினர்.