×

பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

திண்டுக்கல் திண்டுக்கலில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் அடுத்த மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த அருள் ஆரோக்கியதாஸ் (18). இவர் திண்டுக்கல் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ஆரோக்கிய தாஸ், தனது பெற்றோரிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்கி தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால் பெற்றோர் தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருவதாகவும்
 

திண்டுக்கல்

திண்டுக்கலில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் அடுத்த மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த அருள் ஆரோக்கியதாஸ் (18). இவர் திண்டுக்கல் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், ஆரோக்கிய தாஸ், தனது பெற்றோரிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்கி தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால் பெற்றோர் தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக அருள் ஆரோக்கியதாஸ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், முத்தழகுபட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல் தெற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.