×

தொடர் மழையால் தொடங்கிய நடவு பணிகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை பெய்து வருவதால் நடவுப்பணிகள் தொடங்கி இருக்கிறது. இதனால், நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி நடவு பணிகள் தொடங்கியுள்ளது.தொடர்ச்சியாக மழை பெய்து சாதகமான சூழலை உருவாகி இருப்பதால், நெல் நாத்து நடவு பணியை நத்தம் சுற்றுவட்டார விவசாயிகள் தொடங்கியுள்ளனர். வயல்களில் நீர் தேங்கி இருப்பதால் நடவு பணிகள் செய்ய ஏதுவாக இருப்பதாக
 

தொடர் மழை பெய்து வருவதால் நடவுப்பணிகள் தொடங்கி இருக்கிறது. இதனால், நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி நடவு பணிகள் தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து சாதகமான சூழலை உருவாகி இருப்பதால், நெல் நாத்து நடவு பணியை நத்தம் சுற்றுவட்டார விவசாயிகள் தொடங்கியுள்ளனர். வயல்களில் நீர் தேங்கி இருப்பதால் நடவு பணிகள் செய்ய ஏதுவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும், சேற்றில் இறங்கி நாற்று நடவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பல பெண்களுக்கு தற்போது வேலை கிடைத்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.2500 வரை கூலி வாங்குவதாக மகிழ்ச்சியுடன் நடவு பணியை செய்து வரும் விவசாய கூலியாட்கள் தெரிவித்தனர். இதனால் இந்த வருடம் நல்ல மகசூல் இருக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.