×

ஒட்டன்சத்திரம் தனியார் விடுதியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த ஐ.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் நாட்டுதுறை (32). இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நாட்டுதுறையின் முதல் மனைவி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டுதுறைக்கு இரண்டாது திருமணம்
 

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த ஐ.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் நாட்டுதுறை (32). இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நாட்டுதுறையின் முதல் மனைவி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 8 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி மாதம் நாட்டுதுறைக்கு இரண்டாது திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப கதராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். நேற்றிரவு பணி முடிந்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று அதிகாலை பணிக்கு செல்ல அழைப்பதற்காக காவல் ஆய்வாளர் சீனிவாசன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த காலர்கள், அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, நாட்டுதுறை அறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.