×

கோட்டை மாரியம்மன் கோயிலில் நவசண்டி யாகம் – பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று நவசண்டி யாகம் நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டங்களில், 9 வேத விற்பன்னர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை காண ஏராளமானோர் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட்டனர். யாகத்தின் இறுதியில் ரட்சை எனப்படும் ஹோம பஸ்பம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை பூஜையறையில் வைத்து நாள்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவது, நன்மைகளை தரும்
 

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று நவசண்டி யாகம் நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டங்களில், 9 வேத விற்பன்னர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை காண ஏராளமானோர் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட்டனர்.

யாகத்தின் இறுதியில் ரட்சை எனப்படும் ஹோம பஸ்பம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை பூஜையறையில் வைத்து நாள்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவது, நன்மைகளை தரும் என கோயில் அறங்காவலர்கள் தெரிவித்தனர். மேலும், சண்டியாக பூஜை செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடைகள், தாமதங்கள், திருஷ்டிகள் நீங்கும், மறைமுக எதிரிகள் உள்ளிட்டவை நீங்கி, சிறந்த வாழ்க்கை அமையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.