×

காவலர் தேர்வு – முன்னாள் படைவீரர்களுக்கு இலவச பயிற்சி

காவலர் தேர்வில் பங்கேற்கும் முன்னாள் படைவீரர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 7,800 காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், முன்னாள் படைவீரர்களுக்கு 5% பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 26ஆம் தேதி கடைசி நாள் என்றும், எழுத்துத்தேர்வு
 

காவலர் தேர்வில் பங்கேற்கும் முன்னாள் படைவீரர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 7,800 காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், முன்னாள் படைவீரர்களுக்கு 5% பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 26ஆம் தேதி கடைசி நாள் என்றும், எழுத்துத்தேர்வு வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கட்டுள்ளது.


இதனிடையே, காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களுக்கு
District employment and career guidance centre Santhome மூலமாக இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.


இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்த ஆவணங்களின் இரு நகலையும், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், விருப்ப கடிதத்தினை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.