×

முழு கொள்ளளவை எட்டிய குடகனாறு அணை… வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்…

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையின் நீர்மட்டம் 24.5 அடியாக உயர்ந்ததை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடகனாறு அணை அமைந்துள்ளது. 27 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பு கருதி 25 அடி வரை தண்ணீர் தேப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடகனாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து
 

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையின் நீர்மட்டம் 24.5 அடியாக உயர்ந்ததை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடகனாறு அணை அமைந்துள்ளது. 27 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பு கருதி 25 அடி வரை தண்ணீர் தேப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடகனாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை அணை 24.5 அடியை எட்டியது. மேலும், அணைக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் கொண்டிருந்தது.

இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி குடகனாற்றில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கிழக்கு கால்வாயில் இருந்து வெள்ளியணைக்கு வினாடிக்கு 50 கனஅடி நீரும், மேற்கு கால்வாயில் 14 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீண்ட நட்களுக்கு பிறகு குடகனாறுஞு நிரம்பி உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.