×

மதுபோதையில் பணிக்கு வந்த மருந்தாளுநருக்கு மெமோ… திண்டுக்கல் அரசு மருத்துமனை அதிரடி!

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிபவர் சுரேஷ். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதலில் வந்த இவர், ஞாயிற்றுக் கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் சுரேஷ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருந்து வாங்க சென்ற நோயாளியின் உறவினரை, சுரேஷ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை நோயாளியின் உறவினர்கள் சமூக வலைதளத்தில்
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க வந்தவரிடம் மதுபோதையில் தகராறு செய்த மருந்தாளுநருக்கு, மெமோ வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிபவர் சுரேஷ். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதலில் வந்த இவர், ஞாயிற்றுக் கிழமை இரவு பணியில் இருந்துள்ளார்.

அப்போது, மதுபோதையில் சுரேஷ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருந்து வாங்க சென்ற நோயாளியின் உறவினரை, சுரேஷ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை நோயாளியின் உறவினர்கள் சமூக வலைதளத்தில் பகர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மதுபோதையில் பணியில் ஈடுபட்ட மருந்தாளுநர் சுரேஷூக்கு மெமொ வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், மருந்தாளுநர் சுரேஷ் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதை கண்காணிக்க தவறியதாக, அரசு மருத்துவமனை முதன்மை மருந்தாளுநர் மற்றும் மருந்தாளுநர் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.