×

காதலனை மீட்டுத்தரக் கோரி, காவல் நிலையத்தில் மாணவி தர்ணா!

திண்டுக்கல் நிலக்கோட்டையில் காதலனை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையம் முன்பு, கல்லூரி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த கொக்குபட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் பாக்கியஷீலா(19). இவர் திருச்சியில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஷீலா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தை பார்த்த கிராமத்தினர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர் தப்பியோடி உள்ளார்.
 

திண்டுக்கல்

நிலக்கோட்டையில் காதலனை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையம் முன்பு, கல்லூரி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த கொக்குபட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் பாக்கியஷீலா(19). இவர் திருச்சியில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஷீலா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தை பார்த்த கிராமத்தினர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர் தப்பியோடி உள்ளார்.

இந்த நிலையில, தனது காதலனை மீட்டுத்தரக் கோரி பாக்கியஷீலா நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் பாக்கியஷீலாவை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. வேதனையடைந்த அவர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, தன்னை போலீசார் தாக்கியதாவும், தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்ணீர் மல்க பாக்கியஷீலா தெரிவித்தார். இதனையடுத்து, அவரது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், அவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.