×

வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திண்டுக்கல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள கக்கன் நகரில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு திண்டுக்கல்-கரூர் அகல ரயில் பாதைக்காக நிலம் கையகப் படுத்தியபோது, கக்கன் நகரை சேர்ந்தவர்களுக்கு, திண்டுக்கல் மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட பர்மா காலனியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. அந்த
 

திண்டுக்கல்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள கக்கன் நகரில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு திண்டுக்கல்-கரூர் அகல ரயில் பாதைக்காக நிலம் கையகப் படுத்தியபோது, கக்கன் நகரை சேர்ந்தவர்களுக்கு, திண்டுக்கல் மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட பர்மா காலனியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கி தரப்பட்டது.

அந்த இடத்தில் வீடுகட்டி கடந்த 35 வருடங்களாக வசித்து வரும் பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆட்சியர் உள்பட பலரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களுக்கு விரைந்து வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.