×

தாயை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம்… தந்தையை அடித்துக் கொன்ற இளைஞர்!

திண்டுக்கல் தாயை கடத்தி 2-வது திருமணம் செய்த தந்தையை, மகன் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு தங்கராஜ் (47). ஆட்டிறைச்சி விற்பனையாளர். இவரது மனைவி ரீத்தா. இவர்களுக்கு கிஷோர் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரீத்தா தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காந்திகிராமம் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே
 

திண்டுக்கல்

தாயை கடத்தி 2-வது திருமணம் செய்த தந்தையை, மகன் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு தங்கராஜ் (47). ஆட்டிறைச்சி விற்பனையாளர். இவரது மனைவி ரீத்தா. இவர்களுக்கு கிஷோர் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரீத்தா தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காந்திகிராமம் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே ஜெரால்டு தங்கராஜ் அடித்துக் கொல்லப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் கிடந்தார். அருகில் நின்ற அவரது இருசக்கர வாகனத்தை வைத்து, அவரை அடையாளம் கண்டுகொண்ட அம்பாத்துரை போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஜெரால்டு தங்கராஜின் மகன் கிஷோரிடம் விசாரித்தபோது அவர் முண்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தந்தையை கொலை செய்ததை ஒப்புகொண்டார். மேலும், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெரால்டு தங்கராஜ்ம் – ரீத்தாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ரீத்தாவின் பெற்றோர், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருக்கு கிஷோர் பிறந்துள்ளான்.

இந்த நிலையில், ஜெரால்டு தங்கராஜ், 1 வயதான குழந்தையுடன் ரீத்தாவை கடத்திச்சென்று 2-வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது கிஷோர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், தந்தை ஜெரால்டு தங்கராஜ் அவரது சம்பளத்தை பறித்துக்கொண்டு துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், ரீத்தா தற்கொலை செய்வதற்கு முன்பாக கிஷோர் தனது முதல் கணவருக்கு பிறந்தவர் என்ற விபரத்தை தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தை மீது கோபத்தில் இருந்த கிஷோர், அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி, கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த கிஷோர் செட்டியாப்பட்டி ரயில் நிலையத்திற்கு வரும்படி ஜெரால்டு தங்கராஜை அழைத்துள்ளார். அதனை நம்பி சென்ற ஜெரால்டு தங்கராஜை, தனது நண்பர்களுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்று, சடலத்தை தண்டவாளத்தில் வீசியது தெரிய வந்தது. இதனை அடுத்து,கிஷோரை கைதுசெய்த போலீசார், அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.