×

காங்., எம்.பி. ஜோதிமணியை ஆவேசத்துடன் துரத்திய மக்கள்! காரில் ஏற்றி தப்ப வைத்த திமுகவினர்

கரூர் தொகுதி்யின் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை கோம்பை மக்கள் ஆவேசத்துடன் துரத்தி வந்ததால் அவரை காரில் ஏற்றி தப்ப வைத்தனர் திமுகவினர். இதனால் கோம்பை பகுதியில் பதற்றம் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கோம்பையில் சிப்கோ நிறுவனம் அமையவிருக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ஆதரவாளர்களுடன் சென்று, சிப்கோ நிறுவனம் அப்பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. ஜோதிமணி்யின் இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்தனர்.
 

கரூர் தொகுதி்யின் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை கோம்பை மக்கள் ஆவேசத்துடன் துரத்தி வந்ததால் அவரை காரில் ஏற்றி தப்ப வைத்தனர் திமுகவினர். இதனால் கோம்பை பகுதியில் பதற்றம் நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கோம்பையில் சிப்கோ நிறுவனம் அமையவிருக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ஆதரவாளர்களுடன் சென்று, சிப்கோ நிறுவனம் அப்பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

ஜோதிமணி்யின் இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்தனர். அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணனும் அங்கு வந்தார்.

‘’இந்த நிறுவனம் வந்தால் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அதனால் இந்நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம்’’ என்று ஜோதிமணி்யிடம் கூறினார் மலர்வண்ணன்.

சிப்கோ நிறுவனம் தங்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது என்று அப்பகுதி்யினரும் எடுத்தூச்சொன்னார்கள். ஆனாலும், அதை எல்லாம் காதில் வாங்காமல், தனது போராட்டத்திலேயே ஜோதிமணி குறியாக இருந்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதியினர், ஜோதிமணியை நோக்கி சத்தம் போட்டபடியே ஓடிவந்தனர். உடனே, அங்கிருந்த திமுகவினர் ஜோதிமணி்யை அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

பொதுமக்களும் சத்தம் போட்டபடியே பின் தொடர்ந்தனர். இதனால், ஜோதிமணியை வேக வேகமாக அழைத்துக்கொண்டு காருக்குள் ஏற்றி அனுப்பி வைத்தனர் திமுகவினர்.

கோம்பை பகுதியில் நடந்த இந்த பதற்றத்தினால் திண்டுக்கள் முழுவதும் பரபபரப்பு ஏற்பட்டிருக்கிறது.