×

பஞ்சு மெத்தை வாங்கி தர மறுத்த பெற்றோர்… வேதனையில் உயிரை மாய்த்த பிளஸ் 1 மாணவர்…

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே பெற்றோர் மெத்தை வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த, பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு முத்து நகரை சேர்ந்தவர்கள் வின்சென்ட் செபாஸ்டின் – சோபியா தம்பதியினர். இவர்களது மகன் இன்பெண்ட்(17). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இயல்பிலேயே பிடிவாத குணமுடைய இன்பெண்ட் தனக்கு பிடித்த பொருட்களை வாங்கி தர கூறி பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால்,
 

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பெற்றோர் மெத்தை வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த, பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு முத்து நகரை சேர்ந்தவர்கள் வின்சென்ட் செபாஸ்டின் – சோபியா தம்பதியினர். இவர்களது மகன் இன்பெண்ட்(17). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இயல்பிலேயே பிடிவாத குணமுடைய இன்பெண்ட் தனக்கு பிடித்த பொருட்களை வாங்கி தர கூறி பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால், அவன் கேட்கும் பொருட்களை பெற்றோர் தவறாது வாங்கி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று தனக்கு இரும்பு கட்டிலில் படுக்க மெத்தை வாஙகி தரும்படி தாய் சோபியாவிடம், இன்பெண்ட் கேட்டுள்ளான். சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இன்பெண்ட் வீட்டை தாழிட்டு கொண்டு அறைக்குள் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சோபியா, இதுகுறித்து கணவர் செபாஸ்டினுக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து, செபாஸ்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்போது, இன்பெண்ட் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த தாடிகொம்பு போலீசார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.