×

ராணுவ வீரரின் உடல், 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

தருமபுரி ஜம்மு -காமீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பூபதியின் உடல், அவரது சொந்த ஊரான கம்மாளப்பட்டியில், 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சாமிநாதன் – சித்ரா தம்பதியினர். இவர்களது மூத்த மகன் பூபதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு
 

தருமபுரி

ஜம்மு -காமீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பூபதியின் உடல், அவரது சொந்த ஊரான கம்மாளப்பட்டியில், 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சாமிநாதன் – சித்ரா தம்பதியினர். இவர்களது மூத்த மகன் பூபதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்தி விட்டு பூபதி பணிக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் ஜம்மு – காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு ஏராளமான கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி, சார் ஆட்சியர் பிரதாப், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன், ராணுவ அதிகாரிகள் பூபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பூபதியின் உடல் ராணுவ வாகனம் மூலம் இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பூபதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.