×

காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி!

தர்மபுரி மாவட்டத்தில், சிறந்த முறையில் பணியாற்றிய 13 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் பிரவேஸ்குமார் ஐபிஎஸ். இவர், தர்மபுரி மாவட்ட காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் போலீசாரை கண்டறிந்து அவர்களை நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார். அதற்கேற்ப, மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றும் போலீசாரை , மதிப்பீடு செய்ய குழு
 

தர்மபுரி மாவட்டத்தில், சிறந்த முறையில் பணியாற்றிய 13 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் பிரவேஸ்குமார் ஐபிஎஸ். இவர், தர்மபுரி மாவட்ட காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் போலீசாரை கண்டறிந்து அவர்களை நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.

அதற்கேற்ப, மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றும் போலீசாரை , மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கைபடி, 13 போலீசார் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் சமீப கால பணிகளை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக, சந்தேக நபர்கள் மீது உடனடியாக தகவல் அளித்த எஸ்.ஐ அருள் வடிவழகன், எஸ் எஸ் ஐ-க்கள் குணசேகரன், செந்தில்குமார், தருமன், கருணாநிதி, காவலர் சிவக்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

காரிமங்கலத்தில் சமீபத்தில் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட  ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பிடிக்க காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் துரைராஜ், எஸ்எஸ்ஐ-க்கள் மூர்த்தி, பெரியசாமி, முருகன், ஏட்டு ராமச்சந்திரன், காவலர் சுரேஷ் ஆகியோருக்கும், அரூர் காவல் நிலைய போக்குவரத்து காவலர் மயில்சாமி ஆகியோருக்கும் பாரட்டு பட்டியலில் இடம்பெற்றனர். பாராட்டு சான்றிதழ் பெற்ற அவர்கள், காவல் கண்காணிப்பாளருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.