×

தர்மபுரி: “மக்களின் தேவைகளை தேடித்தேடி அறிந்து நிறைவேற்றும் அரசு” – கே.பி.அன்பழகன்

அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் தேடித்தேடி கண்டறிந்து, அவற்றை தமிழக அரசு பூர்த்தி செய்து வருவதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை துவங்கி வைத்து பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட ஒவ்வொரு தரப்பு மக்களின் தேவைகள் என்னென்ன என தேடித்தேடி கண்டறிந்து, அவற்றையெல்லாம் பூர்த்திசெய்து தரும் அரசாக, இன்றைய தமிழக அரசு
 

அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் தேடித்தேடி கண்டறிந்து, அவற்றை தமிழக அரசு பூர்த்தி செய்து வருவதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கான பூமி பூஜையை துவங்கி வைத்து பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட ஒவ்வொரு தரப்பு மக்களின் தேவைகள் என்னென்ன என தேடித்தேடி கண்டறிந்து, அவற்றையெல்லாம் பூர்த்திசெய்து தரும் அரசாக, இன்றைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும், இத்தகைய அரசின் பக்கம் மக்கள் நிற்பதே, மாநிலத்தின் அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கு பெரிதும் துணையாக அமையும் என்று கூறிய அமைச்சர் அன்பழகன், அனைத்தையும் சிந்தித்து தேர்தல் நேரத்தில் மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டுமென கூறினார்.