×

தர்மபுரி- மயான பாதை அடைப்பு – சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்

தர்மபுரி தர்மபுரி அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததால் கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுமரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ள வேப்பிலைஹள்ளி கிராமத்தில் முதியவர் நாராயணன் (63) என்பவர் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் அவர் சடலத்தை அடக்கம் செய்ய அருகிலுள்ள சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் மர்மநபர்கள் முள்வேலி கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி வழியை அடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வேப்பிலைஹள்ளியில் இருந்து
 

தர்மபுரி

தர்மபுரி அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததால் கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுமரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்துள்ள வேப்பிலைஹள்ளி கிராமத்தில் முதியவர் நாராயணன் (63) என்பவர் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் அவர் சடலத்தை அடக்கம் செய்ய அருகிலுள்ள சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் மர்மநபர்கள் முள்வேலி கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி வழியை அடைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வேப்பிலைஹள்ளியில் இருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அவர்கள், முள்வேலி கம்பிகளை அகற்றி வழி ஏற்படுத்தித் தந்தனர். மேலும், பென்னாகரம் வட்டாட்சியர் தலைமையில் சுடுகாட்டுப் பாதை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்ட கிராம மக்கள் சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.