×

சுருக்குவலை தடை செய்ததில் கடனாளியான மீனவர் தற்கொலை!

கடலூரில் சுருக்குவலை தடை செய்ததில் கடனாளி ஆகியதாக மீனவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சுருக்குமடி வலை தடையை நீக்ககோரி 300க்கும் மேற்பட்ட தேவனாம்பட்டினம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பல லட்சம் கடன்பெற்று சுருக்குமடி வலை பயன்படுத்தி வந்த நிலையில் அதனை மாவட்ட நிர்வாகம் தடை செய்ததால் கடன் தொல்லை தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நேற்று
 

கடலூரில் சுருக்குவலை தடை செய்ததில் கடனாளி ஆகியதாக மீனவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சுருக்குமடி வலை தடையை நீக்ககோரி 300க்கும் மேற்பட்ட தேவனாம்பட்டினம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

rep image

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பல லட்சம் கடன்பெற்று சுருக்குமடி வலை பயன்படுத்தி வந்த நிலையில் அதனை மாவட்ட நிர்வாகம் தடை செய்ததால் கடன் தொல்லை தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து சங்கரின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் சுருக்கு மடி வலை பயன்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி அளிக்க வேண்டுமெனவும் மீனவர்களின் தற்கொலை தடுக்க நடவடிக்கை என கோரிக்கை வைத்தனர்.

மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கை விட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.