×

முழு ஊரடங்கு- கடலூர் கோவில் வாசலில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!

கடலூர் கடலூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் வாசலில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக, இன்று ஞாயிற்றுக் கிழமை முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடலூரில் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள், பொதுமுடக்கம் காரணமாக அங்குள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் வாசலில் எளிமையான முறையில்
 

கடலூர்

கடலூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் வாசலில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக, இன்று ஞாயிற்றுக் கிழமை முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடலூரில் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள், பொதுமுடக்கம் காரணமாக அங்குள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் வாசலில் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது.

இதனையொட்டி, அதிகாலை 4.30 மணி முதல் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகள் கோயில் வாயில் முன்பாக அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் பஙகேற் ஏராளமானோர் வந்திருந்ததால் திருவந்திபுரம் கோயில் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.