×

கொரோனா நோயாளிகள் உணவில் பல்லி – தரமான உணவு வழங்க கோரிக்கை!

கடலூரில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு என 130 படுக்கைகள் கொண்டு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, கூத்தப்பாக்கம் கஜேந்திரன் என்ற நபரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை உணவாக இட்லி வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது உணவை பிரித்து நோயாளிகள் சாப்பிடும்போது ஒருவரது இட்லியில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து
 

கடலூரில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு என 130 படுக்கைகள் கொண்டு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, கூத்தப்பாக்கம் கஜேந்திரன் என்ற நபரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை உணவாக இட்லி வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது உணவை பிரித்து நோயாளிகள் சாப்பிடும்போது ஒருவரது இட்லியில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து நோயாளி அலறியடித்த நிலையில், அனைவரும் காலை உணவு உண்ணாமல் புறக்கணித்தனர். உடனடியாக நோயாளிகளுக்கு மாற்று உணவு வரவழைத்து தரப்பட்டது.

இந்த நிலையில், தரமான உணவு வழங்க கோரி கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நோயாளிகளிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.