×

போலீஸ் துரத்தியபோது ஆற்றில் விழுந்து மீனவர் இறந்த சம்பவம்: தாழங்குடாவில் தொடரும் பதற்றம் -போலீஸ் குவிப்பு

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூரை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி மதிவாணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தாழங்குடா கிராமத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்
 

போலீசார் துரத்தியதால் ஆற்றில் விழுந்து இறந்த மீனவரின் சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதாலும் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதாலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி மதிவாணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தாழங்குடா கிராமத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாழங்குடா பகுதியில் உள்ள உப்பானாறு ஆற்றங்கரையில் சுப்பிரமணியம், குமார்,குப்புராஜ் ஆகிய மூன்று பேர் கரையில் அமர்ந்து மது அருந்தியுளதாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இவர்களிடம் வருவதைக் கண்ட மூன்று பேர் போலீசார் தங்களை பிடிக்க வருவதாக எண்ணி ஆற்றில் குதித்துள்ளனர். இதில் சுப்பிரமணியன், குமார்,ஆற்றை நீந்தி எதிர் கரைக்குச் சென்றனர். ஆனால் குப்புராஜ் ஆற்றில் விழுந்து இறந்துள்ளார்.

rep image

இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் துரத்தியதால் தான் மீனவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறி கிராம மக்கள் காவல்துறை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் டிஎஸ்பி சாந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீசார் துரத்தியதால் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியன் உத்தரவாதம் அளித்தார். அதன் பேரில்
கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஆனாலும், தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.