×

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கடலூர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மின்வாரியஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கேப்பர் மலையில் உள்ள மேற்கு பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, தமிழ்நாடு அரசு மின்சார ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள 10 சதவீத போனஸ் ரத்துசெய்து, கடந்தாண்டு வழங்கியது போல் 20 சதவீத போனஸ்
 

கடலூர்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மின்வாரிய
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேப்பர் மலையில் உள்ள மேற்கு பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது,

தமிழ்நாடு அரசு மின்சார ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள 10 சதவீத போனஸ் ரத்துசெய்து, கடந்தாண்டு வழங்கியது போல் 20 சதவீத போனஸ் தொகை வழங்கவும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கவும் வலியுறுத்தினர்.