×

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

கடலூர் கடலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைதுசெய்யக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்அளித்தனர். கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி முறையாக பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் கடலூர், பரங்கிப்பேட்டை, முதுநகர் ஆகிய பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட குழுக்களாக ஆயிரக்கணக்கான பெண்களை இணைத்து மாதம்தோறும் பணம்
 

கடலூர்

கடலூரில் தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைதுசெய்யக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார்
அளித்தனர். கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி முறையாக பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், இந்த ஆண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் கடலூர், பரங்கிப்பேட்டை, முதுநகர் ஆகிய பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட குழுக்களாக ஆயிரக்கணக்கான பெண்களை இணைத்து மாதம்தோறும் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சீட்டுப்பணம் செலுத்தியவர்கள் அதனை திருப்பிகேட்க சென்றுள்ளனர். அப்போது அவரது வீடுபூட்டி இருந்ததுடன், செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 36 குழுக்களை சேர்ந்த பெண்கள் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.