×

கடலூர் ஆட்சியரின் அதிரடி! சாலையில் நடந்து சென்று கடைக்காரர்கள், வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம்!

காட்டுமன்னார்கோவில் அருகே கடலூர் மாவட்ட ஆட்சியர் கடைவீதிகளில் நடந்து சென்று கொரோனா பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டு கடைக்காரர்கள், வாகன ஓட்டிகளுக்கு விதித்த அதிரடி அபராதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாய் துவங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தை பார்வையிட்ட ஆட்சியர், போஷன் அபியான்-2020 ஊட்டச்சத்து மாத விழாவில் கலந்துகொண்டு இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை
 

காட்டுமன்னார்கோவில் அருகே கடலூர் மாவட்ட ஆட்சியர் கடைவீதிகளில் நடந்து சென்று கொரோனா பரவல் குறித்த ஆய்வை மேற்கொண்டு கடைக்காரர்கள், வாகன ஓட்டிகளுக்கு விதித்த அதிரடி அபராதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாய் துவங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தை பார்வையிட்ட ஆட்சியர், போஷன் அபியான்-2020 ஊட்டச்சத்து மாத விழாவில் கலந்துகொண்டு இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி தாய்மார்கள் ஊட்டச்சத்தான உணவு உட்கொள்வது குறித்த அவசியத்தை விளக்கினார்.

அடுத்ததாக குமராட்சி கடைவீதி பகுதிகளில் நடந்தே சென்று முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அனைவருக்கும் முக கவசங்களை வழங்கினார். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் முக கவசங்கள் அணியாமல் பாதுகாப்பின்றி உலாவந்த இளைஞர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வுகளால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.