×

சிதம்பரம் ; 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி 20, ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டத்து ஊராட்சியில் பணிபுரியும் மணிகண்டன் என்ற டேங்க் ஆபரேட்டரின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்குவதற்கு 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து மணிகண்டன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய லஞ்ச பணம்
 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி 20, ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டத்து ஊராட்சியில் பணிபுரியும் மணிகண்டன் என்ற டேங்க் ஆபரேட்டரின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்குவதற்கு 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து மணிகண்டன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய லஞ்ச பணம் ரூ 20,000 ஆயிரத்தை பழனிச்சாமி பெற்ற போது கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரை கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.