×

கடலூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், செல்போன் திருடிய நபர் கைது

கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர். கடலூர் முதுநகர் அருகே தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை முருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பக்கத்து வீட்டினர், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த முருகன் உள்ளே
 

கடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

கடலூர் முதுநகர் அருகே தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிதம்பரம் அருகே உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை முருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பக்கத்து வீட்டினர், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த முருகன் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த கடலூர் துறைமுக போலீசார், அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.