×

கருங்கல்பாளையம் சந்தையில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மாடுகள் விற்பனை!

 

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற புகழ்பெற்ற கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையானது மிகவும் சிறப்பு பெற்றதாகும். வாரம்தோறும் புதன் கிழமை இறைச்சிகளுக்கான மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. இதில் கேரளாவில் இருந்து  வியாபாரிகள் வருகைபுரிந்து, தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கி செல்கின்றனர். வியாழக்கிழமை நடைபெறும் சந்தையில் பசு மற்றும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்த சந்தையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா ,கேரளா மாநிலங்களைச் சேர்ந்த வியா வியாபாரிகளும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதோடு, மாடுகளை விற்பனையும் செய்கின்றனர். குறிப்பாக அதிக பால் தரக்கூடிய மாடுகளான ஜெர்சி, பிரீஸ், பிரீஸ் மற்றும் நாட்டு பசு மாடுகளும், முர்ரா ரக எருமைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. 

நேற்று நடைபெற்ற சந்தையில் பசு மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல, எருமைகள் 30,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், இன்றைய சந்தையில் 300 பசு மாடுகளும், 500 எருமைகளும், 200 கன்றுகளும் என சுமார் 2 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.