×

கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்ட திமுகவினர்!

கோவை கோவையில் வாக்காளர்க்ளுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருப்பாக கூறி, கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பொறியாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுக்க லட்சுமணன் வீட்டில் 5 கோடி ரூபாய் பணம் வைத்திருப்பதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதனால் நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், அவரது
 

கோவை

கோவையில் வாக்காளர்க்ளுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருப்பாக கூறி, கோவை மாநகராட்சி பொறியாளர் வீட்டை நள்ளிரவில் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பொறியாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுக்க லட்சுமணன் வீட்டில் 5 கோடி ரூபாய் பணம் வைத்திருப்பதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதனால் நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், அவரது வீட்டை சூழ்ந்து கொண்டனர்.

தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பொறியாளர் லட்சுமணனின் காரை சோதனையிட்டன்ர். அதில் பணம் எதுவும் கைப்பற்றப்பட்டவில்லை. இந்த நிலையில் வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தக் கோரி திமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, லட்சுமணன் வீட்டில் சோதனை நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.