×

ஜாமினில் வந்த தனியார் மருத்துவமனை சேர்மேன் விபத்தில் பலி… போலீசார் விசாரணை

கோவை கோவையில் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்தவர் மருத்துவர் உமாசங்கர்(54). இவர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில். கோவையை சேர்ந்த பிரபல மருத்துவர் ராமச்சந்திரன்(72) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், தனது மருத்துவமனையை கிளையை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில், மருத்துவமனைக்கு முறையாக வாடகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தவில்லை என
 

கோவை

கோவையில் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்தவர் மருத்துவர் உமாசங்கர்(54). இவர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில். கோவையை சேர்ந்த பிரபல மருத்துவர் ராமச்சந்திரன்(72) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், தனது மருத்துவமனையை கிளையை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு முறையாக வாடகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட மருத்துவர் ராமச்சந்திரனுக்கு, உமாசங்கர் மற்றும் மருத்துவனை மேலாளர் மருதவாணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததால், அவர் போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து, பண மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மருத்துவர் உமாஷங்கரை உள்ளிட்ட இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியான அவர், நாள்தோறும் கோவை, ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

வழக்கம்போல், இன்றும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அவர் நடந்தசென்றார். கண்ணப்பநகர் அருகே சென்றபோது அவர் மீது எதிரே வந்த கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.