×

வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவில் வந்த மொபைல் வாகனம்… திமுகவினர் திரண்டதால் பரபரப்பு..!

கோவை கோவை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு இரவில் திடீரென மொபைல் வேன் வந்ததால், அங்கிருந்த அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பில் இருந்து வருகிறது. மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் 24 மணிநேரமும் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை
 

கோவை

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு இரவில் திடீரென மொபைல் வேன் வந்ததால், அங்கிருந்த அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பில் இருந்து வருகிறது. மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் 24 மணிநேரமும் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஒரு மொபைல் வேன் மற்றும் சாதாரண வேன் ஒன்று வந்தன. இதனை அறிந்த திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், சண்முகசுந்தரம், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு விரைந்து வந்து, அஙுகு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களுக்காக மொபைல் கழிப்பறை வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து, திமுகவினர் அந்த வாகனத்தில் ஏறி சோதனையிட்டபோது, அதில் தேர்தல் தொடர்பான எந்த உபகரணங்களும் இல்லாதது உறுதியானது. எனினும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வாகனம் வெளியே கொண்டு செல்லப்பட்டது.

இதனை அடுத்து, அரசியல் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு இரவில் வந்த வாகனத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.