×

“பொள்ளாச்சி சம்பவம்; குற்றவாளி உயர் பதவியில் இருந்தாலும் தண்டிக்க வேண்டும்”- ஈஸ்வரன் பேட்டி

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஈஸ்வரன், கடவுள் நம்பிக்கை தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து விட்டதாகவும், அதனால், திமுகவுக்கு எதிரான கடவுள் நம்பிக்கை குறித்த பொய்
 

கோவை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஈஸ்வரன், கடவுள் நம்பிக்கை தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து விட்டதாகவும், அதனால், திமுகவுக்கு எதிரான கடவுள் நம்பிக்கை குறித்த பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் எனறும் கூறினார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் கோவை மாநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சரியான மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் வசதி அரசு செய்து தரவில்லை என குற்றம்சாட்டிய ஈஸ்வரன், அரசின் திட்டப்பணிகள் அமைச்சர் கூறும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் சாடினார். தொடர்ந்து, முதலமைச்சர் 200 நாட்கள் கோவையில் இருந்தாலும் திமுக கூட்டணியை சரிப்பது கடினம் என்ற ஈஸ்வரன், பதிவு செய்தவர்களை விட குறைவான மருத்துவர்களே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் அறிவுறுத்தினார்.