×

கோவையில் அமலுக்கு வந்த இரவுநேர ஊரடங்கு – வெறிச்சோடிய முக்கிய சாலைகள்!

கோவை கோவையில் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மாநகரின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்ற வெறிச்சோடியது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையொட்டி, கோவை மாநகரில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில் மாலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனை தொடர்ந்து
 

கோவை

கோவையில் நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மாநகரின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்ற வெறிச்சோடியது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையொட்டி, கோவை மாநகரில் உள்ள மளிகை கடைகள், உணவகங்களில் மாலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனை தொடர்ந்து இரவு 9 மணியளவில் கடைகள் அடைக்கப்பட்டதால், நகரின் முக்கிய கடைவீதிகள் வெறிச்சோடின.

இதேபோல், ஊரடங்கையொட்டி இரவு 9 மணிக்குள் மேல் பேருந்துகள் இயக்கப்படாததால், எப்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்கள் காற்று வாங்கின. மேலும், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்காததால் பேருந்தை தவறவிட்டவர்கள் பேருந்து நிலையங்களிலேயே உறங்கும் சூழல் ஏறபட்டது.

மாநகர காவல் துறை சார்பில் கோவை நகரில் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காந்திபுரம் உள்ளிட்ட பிரதான மேம்பாலங்களில் போக்குவரத்தை தடுக்கும் பொருட்டு தடுப்புகளை கொண்டு அடைத்தனர்.

தொடர்ந்து, நரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடையை மீறி வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிதது அனுப்பினர்.