×

நிலச்சரிவில் வீடுகளை இழந்த தம்பதி, கைக்குழந்தையுடன் தங்க இடமின்றி தவிப்பு

கோவை மூணார் நிலச்சரிவில் வீட்டை இழந்த இளம் தம்பதியினர், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன் தங்க இடமின்றி தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மூணாரை பூர்வீகமாக கொண்டவர்கள் ரமேஷ் – கயல்விழி தம்பதியினர். இவர்கள் திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி, வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ரமேஷ் மற்றும் கயல்விழி ஆகிய இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிறைமாத
 

கோவை

மூணார் நிலச்சரிவில் வீட்டை இழந்த இளம் தம்பதியினர், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன் தங்க இடமின்றி தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மூணாரை பூர்வீகமாக கொண்டவர்கள் ரமேஷ் – கயல்விழி தம்பதியினர். இவர்கள் திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி, வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ரமேஷ் மற்றும் கயல்விழி ஆகிய இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கயல்விழி, பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், கயல்விழியை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளும் படி மருத்துவமனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மூணாரில் வீடுகள் இடிந்த சூழ்ந்லையில், திருப்பூரில் பணிபுரியும் இடத்திலும் யாரும் உதவ முன்வர வில்லை என கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரமேஷ் – கயல்விழி தம்பதியினர் தவிப்பில் இருந்து வந்தனர். இந்த செய்தியை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர், ரமேஷ் தம்பதியினர் தங்குவதற்கு தனியார் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்ததுடன், அவர்களது செலுவுக்கும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கி உதவினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், மூணாரில் நிலச்சரிவில் இடிந்த வீடுகளுக்கு பதிலாக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் வீடு கட்டி தருவதாக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகவும், அதுவரை வெளியில் தான் தங்க வேண்டும் என தெரிவித்தார். எனவே அரசு அதுவரை தங்களுக்கு இருக்க இருப்பிடம் மற்றும் ஏதேனும் ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தால் உதவியாய் இருக்கும் என்றும் அவர் கூறினார்..