×

கோவை மாநகரில் 50 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை… அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்!

கோவை கோவை மாநகராட்சி பகுதிகளில் 50 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களின் சேவையை அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதன்படி கோவை மாநகராட்சியில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி, மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் 50 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதனையொட்டி, கோவை
 

கோவை

கோவை மாநகராட்சி பகுதிகளில் 50 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களின் சேவையை அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதன்படி கோவை மாநகராட்சியில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி, மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் 50 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதனையொட்டி, கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் 50 நடமாடும் காய்கறி வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்களில் 106 வகையான காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவற்றின் விற்பனை விலைப் பட்டியல் வாகனங்களில் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. வார்டுக்கு தலா 2 வாகனஙகள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி, பழங்களை விற்பனை செய்ய உள்ளனர்.

இதேபோல், பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளை தூய்மை படுத்தும் விதமாக 50 கிருமிநாசினி தெளிப்பு இயந்திரங்களின் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.