×

கோவை சிறையில் இரட்டை ஆயுள் தண்டனை கைதி தற்கொலை!

கோவை பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர், கோவை சிறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜவேலு. இவரது மனைவி மோகனா. வழக்கறிஞரான மோகனா ஆந்திராவில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்து, தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்பாக அம்மாவாசை என்ற பெண், ராஜவேலுவின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை கொலை செய்து எரித்த ராஜவேலு,
 

கோவை

பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர், கோவை சிறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜவேலு. இவரது மனைவி மோகனா. வழக்கறிஞரான மோகனா ஆந்திராவில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்து, தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்பாக அம்மாவாசை என்ற பெண், ராஜவேலுவின் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அவரை கொலை செய்து எரித்த ராஜவேலு, உயிரிழந்தது தனது மனைவி மோகனா என கூறி இறப்பு சான்றிதழும் பெற்றார். அம்மாவாசை மாயமானது குறித்து அவரது உறவினர்கள் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் ராஜவேலு, அவரது கார் ஓட்டுநர் ஆகியோர், கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில், சில மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்த கோவை நீதிமன்றம் வழக்கறிஞர் ராஜவேலு, அவரது மனைவி மோகனா, கார் ஓட்டுநர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து, ராஜவேலு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று சிறையில் உள்ள தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.