×

கோவையில் முழு பொதுமுடக்கம் – முக்கிய சாலைகள் வெறிச்சோடின!

கோவை கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, நகரின் முக்கிய சாலையில் வெறிச்சோடின. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல்லை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை
 

கோவை

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, நகரின் முக்கிய சாலையில் வெறிச்சோடின.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல்லை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத ஒரு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை முழுமையாக மூடப்பட்டன. இதனால், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், அவினாசி சாலை, கிராஸ்கட் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.

எனினும், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்றிரவு முதலே ரயில் நிலையத்தில் காத்திருந்து வருகின்றனர்.