×

ஆனைக்கட்டியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் பெண் யானை பலி!

கோவை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் பெண் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி அடுத்த சேம்புக்கரை வனப் பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனத்திற்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட அவர்கள், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனச்சரகருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், ஆனைக்கட்டி மற்றும் வீரபாண்டி அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு
 

கோவை

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் பெண் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி அடுத்த சேம்புக்கரை வனப் பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வனத்திற்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட அவர்கள், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனச்சரகருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், ஆனைக்கட்டி மற்றும் வீரபாண்டி அரசு கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

உயிரிழந்த யானையின் வாய் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி உள்ளது தெரிய வந்தது. இதனால், அந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவில் அந்த காட்டுயானை ஆந்திராக்ஸ் பாதிப்பினால் இறந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆனைக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.